Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Friday, March 2, 2018

மகாஸிதுஷ் ஷரீஆ : அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)


இஸ்லாமிய ஷரீஆவின் உன்னத நோக்கங்கள் மகாஸிதுஷ் ஷரீஆ என   அழைக்கப்படுகின்றது.
 மகாஸித் என்பது மக்ஸத்எ ன்பதன் பன்மையாகும். இலக்கு, நோக்கம், அடைவு, எதிர்பார்க்கும் விடயம் போன்ற கருத்துக்களை இப்பதம் குறித்து நிற்கின்றது. ~~இஸ்லாமிய ஷரீஆவில் மகாஸித் என்பது இஸ்லாமிய சட்டங்களின் இலக்கு அல்லது நோக்கம் அல்லது அடைவு, அல்லது எதிர்பார்க்கும் விடயம் என்று பொருள் கொள்ளப்படும்|| அதாவது ஷரீஆ தனது போதனைகள் மூலம் அடைய விரும்புகின்ற இலக்குகளைக் குறிக்கின்றது. இக்கருத்தில் வேறு பல பிரயோகங்களையும் இமாம்கள் பயன்படுத்திவந்துள்ளனர். மஸாலிஹ்- நலன்கள்; அஸ்ரார்- இரகசியங்கள்; இலல் - காரணிகள்; நதாஇஜ் - விளைவுகள், மஆல் - அடைவுகள் போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். 

Monday, September 18, 2017

பொழுதுபோக்கு அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)

        
பொழுதுபோக்கு
அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)
ஒரு முஸ்லிம் தனது வாழ்வைத் திட்டமிட்டு அமைத்துக்கொள்ள வேண்டும். தன் தேவைகேற்ப நேரத்தை வகுக்கும்போது ஓய்விற்கும் பொழுது போக்கிற்கும் ஒரு பங்கை வழங்க வேண்டும். தமது பொழுதைக் கழிப்பது குறித்து எந்தக் கவலையுமற்றவர்கள் தங்களுடைய நேரத்தை மட்டுமல்ல அடுத்தவர்களின் நேரத்தையும் வீண்விரயம் செய்து விடுகிறார்கள். உண்மையில் மனிதன், தன் களைப்பை நீக்கி இளைப்பாறுவதற்கும்,
இறையருளைத் தேடிப் பெற்றுக் கொள்ளவதற்கும் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமே ஓய்வு நேரமாகும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. இன்னும் தன்னருளால் இரவையும் பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான். (இரவை) அதில் நீங்கள் இளைப்பாறுவதற்கும், பகலை நீங்கள் (அதில்) அவனுடைய அருளை தேடிக் கொள்வதற்கும் இன்னும் நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் (அவ்வாறு ஆக்கியுள்ளான்)” (28:73)

Monday, September 11, 2017

இஸ்லாத்தில் கல்வி . அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)


இஸ்லாத்தில்  கல்வி
அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமாயின் அவனுக்கு அறிவு அவசியமாகும் . இதனை அங்கீகரித்துள்ள இஸ்லாம், மனிதன் அறிவு பெறுவதற்கான பல வழிகளைத் திறந்து விட்டுள்ளது. பார்த்தல், கேட்டல், சிந்தித்தல், பரிசோதித்தல், ஆராய்தல் போன்ற வழிமுறைகள் இஸ்லாத்தில் பராட்டப்பட்டுள்ளன.
இதற்கு நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வஹி சிறந்த ஆதாரமாகும். நாம் எண்ணவோ, எழுதவோ தெரியாத சமூகமாக இருந்தோம்என்று அப்போதைய நிலையை நபி (ஸல்) அவர்கள் குறித்துக் காட்டினார்கள். அந்தச் சமுதாயாத்தை  சீர்படுத்துவதற்காக வந்த முதல் வஹி, ‘ஓதுவீரகஎன்பதாகவே அமைந்தது. நீர் ஓதும்! உமதிறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக்கொண்டு கொண்டு (எழுதக்) கற்றுக்கொடுத்தான் (96:3-5) என்ற வசனங்களின் மூலம் வாசிப்பானதும், எழுத்தினதும் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டது.

Thursday, August 31, 2017

உலக வாழ்வு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம். அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)

உலக வாழ்வு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்.
அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)
வாழ்வின் எல்லாத் துறைகள் பற்றியும் இஸ்லாம் தனித்துவமான கண்ணோட்டத்தை செலுத்துகிறது. அந்த வகையில் உலக வாழ்வு பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பதை இங்கு நோக்குவோம்.
பொதுவாக உலக வாழ்வு பற்றி , மனிதன் எண்ணக்கருத்துக் களையும் , கண்ணோட்டங்களையும் கொண்டிருகின்றானோ அதற்கு அமையவே அவனது செயற்பாடுகள் யாவும் அமையும். உலகப் பிரச்சினைகளிலும் துன்பங்களிலுமிருந்து விடுபட வேண்டுமானால் மனிதன் தனது ஆசைகளை ஒடுக்கி, உலகைத் துறந்து வாழ வேண்டும் எனக் கருதுவோரும் உள்ளனர்.