இஸ்லாத்தில் கல்வி
அஷ்-ஷேய்க் . எம்.எச்.எம்.புஹாரி (நளீமி)
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமாயின் அவனுக்கு அறிவு அவசியமாகும்
. இதனை அங்கீகரித்துள்ள இஸ்லாம், மனிதன் அறிவு பெறுவதற்கான பல வழிகளைத் திறந்து விட்டுள்ளது.
பார்த்தல், கேட்டல், சிந்தித்தல், பரிசோதித்தல், ஆராய்தல் போன்ற வழிமுறைகள் இஸ்லாத்தில் பராட்டப்பட்டுள்ளன.
இதற்கு நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வஹி சிறந்த ஆதாரமாகும்.
‘நாம் எண்ணவோ, எழுதவோ தெரியாத சமூகமாக இருந்தோம்’ என்று அப்போதைய நிலையை நபி (ஸல்) அவர்கள் குறித்துக் காட்டினார்கள்.
அந்தச் சமுதாயாத்தை சீர்படுத்துவதற்காக வந்த
முதல் வஹி, ‘ஓதுவீரக’ என்பதாகவே அமைந்தது. “நீர் ஓதும்! உமதிறைவன் மாபெரும் கொடையாளி. அவன்தான் எழுதுகோலைக்கொண்டு
கொண்டு (எழுதக்) கற்றுக்கொடுத்தான் (96:3-5) என்ற வசனங்களின் மூலம் வாசிப்பானதும், எழுத்தினதும் முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டது.
இஸ்லாம் கல்வியை ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கோ காலத்துக்கோ உரியதாக
வரையறுக்கவில்லை. தாயின் மடி முதல் மண்ணறை வரை கல்வியை கற்குமாறு கூறுகிறது. அதுமட்டுமன்றி, மனிதன் எப்போதும் கல்வியோடு தொடர்பு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்மெனக்
கேட்டுக் கொள்கிறது. கற்பவனாக, கற்றுக் கொடுப்பவனாக, கற்பபவனுக்கு உதவுபவனாக இரு. நான்காமவனாக இருந்து விடாதே என
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிமான ஆண் பெண் இருபாலர் மீதும் கல்வி கற்பது கடமையெனக்
கூறிய நபி(ஸல்) அவர்கள்,(இப்னு மாஜா) கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக சமுதாயத்தைத் தூண்டினார்கள்.
“யார் அறிவை தேடும் பாதையில்
பயணிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்துக்கு செல்லும் பாதையை இலகுவாக்கிக் கொடுக்கிறான்” (முஸ்லிம்)
“வணக்கத்தின் சிறப்பை விட அறிவின் சிறப்பு உயர்வானதாகும்” (பஸ்ஸர்)
“அறிவு முஃமீங்களின் காணமற்போன பொருள். அதை எங்கு கண்டாலும் பற்றிக்
கொள்ளுங்கள்”(திர்மிதி)
“அறிவை தேடுங்கள், ஏனெனில், அல்லாஹ்வுக்காக அறிவைத் தேடுவதென்பது இறையச்சமிக்க செயலாகும்.
அறிவைத் தொடர்ந்தும் தேடிக் கொண்டிருப்பது இறைவணக்கமாகும். .......... அதைப் பிறருக்குக்
கற்றுக்கொடுப்பது ஸதகாவகும்......” (இப்னு அப்துல்பர்)
“அபுதர் அவர்களே, காலைப்பொழுதில் நீர் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு வசனத்தைக்
கற்றுக் கொள்வது, நூறு ரகஅத்துக்கள் தொழுவதை விட சிறப்பானதாகும். இன்னும் அறிவின் ஓர் அத்தியாயத்தைக்
கற்றுக் கொள்வது. ஆயிரம் ரகஅத்துக்கள் தொழுவதை விட சிறப்பானதாகும். அதன் மூலம் நீர்
செயற்பட்டாலும் சரி, செயற்படாவிட்டாலும் சரி” (இப்னு மாஜா)
மேற்கூறிய ஹதீஸ்கள் யாவும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவனவாகவும்,கற்பதற்கான தூண்டுதலை வழங்குவனவாகவும் இருப்பதை அவதானிக்கலாம்.
இவை மட்டுமன்றி கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக
அல்குர்ஆனும், ஸுன்னாவும்
வேறு பல வழிகளையும் காண்பித்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கற்றோரின் – அறிஞர்களின் மகிமையை எடுத்துக் காட்டுவதாகும்.
கீழுள்ள அல்குர்ஆன் வசனைங்களை பாருங்கள்.
“நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டு அறிந்து
கொள்ளுங்கள்” (16:43)
“(நபியே) அல்லாஹ் சாட்சி கூறுகிறான். நிச்சயமாக அவனைத் தவிர வேறு
நாயகனில்லை. அன்றி (அவ்வாறே) மலக்குகளும், கல்விமான்களும் நீதத்தை நிலைநிறுத்தி அவனைத் தவிர வேறு நாயனில்லை.
அவன் யாவையும் மிகைத்தோன்; ஞாமுடையோன் என்று சாட்சி கூறுகின்றன” (3:18)
“நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்கள்
கல்விமான்கள்தாம்” (35:28)
“உங்களிலுள்ள விசுவாசிகளுக்கும், கல்விஞாமுடையோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்”
(58:11)
இவ்வசனங்கள் மூலம் கல்விமான்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள்.
மலக்குகளுக்கு நெருக்கமானவர்கள். உயர் பதவியுடையவர்கள் என்பதை அல்குர்ஆன் எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறே ஹதீஸ்களும் அறிஞ்சர்களை உயர்த்திக் கூறுகின்றன. “ஆயிரம் வணஸ்தர்களை வெற்றி கொள்வதை விட ஓர் அறிஞனை வெற்றிகொள்வது
சைத்தானுக்கு மிகக் கடுமையானது” (திர்மிதி) “அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும், வானம் பூமி ஆகியனவற்றிலுள்ள படைப்பினங்களும், ஏன்\ புற்றிலிருக்கும் எறும்பு, கடலிலுள்ள மீன் ஆகிய அனைத்தும் மனிதர்களுக்கு நல்லதைப் போதிகின்றவர்களுக்காகப்
பிரார்த்தனை செய்கின்றன” (திர்மிதி) “(அறிவில்லாமல்)
வணக்கத்தில் ஈடுபடும் ஒருவரை விட அறிஞன் எழுபது மடங்கு சிறந்தவராவான்”(இஸ்பஹானி) இவ்வாறெல்லாம் அல்குர்ஆனும் ஸுன்னாவும் அறிஞர்களையும், அறிவைப் போதிப்பவர்களையும் பாராட்டுவதைத்தான் அறிஞர்கள் பின்வருமாறு
விளக்கிக் காட்டுகிறார்கள்.
அறிஞர்கள் தான், மக்களை மிருக நிலையிலிருந்து மானுடப் பண்புடையவர்களாக மாற்றுகிறார்கள்.
அறிஞர்கள் இல்லாவிட்டால் மக்கள் மிருகங்களாகவே இருப்பர்” என இமாம் ஹஸன் (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களுடைய உம்மத்தின் மீது, அவர்களின் தாய் தந்தையரைவிட அறிஞர்களே அதிக இரக்கமுடையவர்களாக
காணப்படுகின்றனர். ஏனெனில், தாய் தந்தையர் உலக நெருப்பிலிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாக்கின்றனர். அறிஞர்களோ
மறுமையின் நெருப்பிலிருந்து பாதுகாக்கின்றனர்” என யஹ்யா இப்னு மஆஸ் என்பவர் குறிப்பிடுகின்றார். அகவேதான், “வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்கு (அதிகம்) கொடுக்கப்படவில்லை” (17:85) என்று குறிப்பிடுகின்ற அல்குர்ஆன், அறிவு விருத்திக்காகப் பிரார்த்திக்க வேண்டும் மென்று கேட்டுக்கொள்கின்றது.
“என் இறைவனே, என்னுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக”
(20:114) என்ற ஒரு பிரார்த்தனையை நபி(ஸல்)
அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து எமக்கும் போதிக்கின்றது.
பிரார்த்தனையோடு சேர்ந்து மனித முயற்ச்சியும் கல்வி விருத்திக்கு
அவசியமானதாகும். இதனை அல்குர்ஆன் பல்வேறு சம்பவங்கள் மூலம் எடுத்துக் காட்டுகிறது.
மூஸா(அலை) அவர்கள், சில விடயங்களைத் தெரிந்து கொள்வதற்காக
“ஹிழார்” என்பவரிடம் சென்றதை ஸுறத்துல் ‘கஹ்ப்’ எடுத்துக் காட்டுகின்றது. மூஸா அவரை நோக்கி, ‘உமக்குக் கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை நீ எனக்குக் கற்பிக்கும்
நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா என்று கேட்டார்(18:66)
ஸுலைமான் (அலை) அவர்கள், ஹுதுஹுது பறவை மூலம் ஸபா நாட்டைப்பற்றி அறிந்ததாக ஸுறதுந் நம்ல்
குறிப்பிடுகின்றது. “(நபி ஸுலைமன் அவர்களே) நீங்கள் அறியாத ஒரு விடயத்தை நான் அறிந்து கொண்டேன். ஸபாவைப்
பற்றி நிச்சயமாக (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்”(27:22)
இவ்வாறு, தன்னைவிடக் கீழானவரிடமிருப்பினும் கல்வியைப் பெற்றுக் கொள்ள
வேண்டும் என்று இஸ்லாம் கேட்டுக் கொள்கிறது.
பின்வரும் வசனத்தை அவதனியுங்கள்: “(இப்ராஹீம் தன் தந்தையை நோக்கி) “என் தந்தையே உங்களுக்கு கிடைக்காத கல்வி ஞானத்தை நான் (என் இறைவன்
அருளால்) அடைந்திருக்கிறேன். நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் நான் உங்களை நேரான வழியில்
நடத்துவேன்” (19:43)
இங்கு வழிதவறிச் சென்று கொண்டிருந்த தந்தைக்கு மகன் இப்ராஹீம்
(அலை) அவர்கள் அறிவுரை பகர்கிறார்கள். ஆகவே, கல்வி உயரிடத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு கிடைப்பது மட்டுமல்ல
கீழ் மட்டத்திலிருந்தும் – அதாவது தம்மைவிட வயதில், தரத்தில், செல்வாக்கில் குறைந்த நிலையிலிருந்து அறிவு கிடைத்தாலும் அதனை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
ஆகவே இஸ்லாம் கல்விக்கும், அதனை அடைந்தவர்களுக்கும் அதனைப் போதிப்பவர்களுக்கும் மிக உயர்ந்த
நிலையை வழங்கியிருகின்றது என்பதை விளங்கிக் கொண்டோம். நாமும் அந்தக் கல்வியை ஆர்வத்தோடு
தேடிக்கொள்ள முயற்சிப்போம்.
No comments:
Post a Comment