இஸ்லாமிய
ஷரீஆவின் உன்னத நோக்கங்கள் மகாஸிதுஷ் ஷரீஆ என அழைக்கப்படுகின்றது.
மகாஸித் என்பது மக்ஸத்எ ன்பதன் பன்மையாகும்.
இலக்கு, நோக்கம், அடைவு, எதிர்பார்க்கும்
விடயம் போன்ற கருத்துக்களை இப்பதம் குறித்து நிற்கின்றது. ~~இஸ்லாமிய
ஷரீஆவில் மகாஸித் என்பது இஸ்லாமிய சட்டங்களின் இலக்கு அல்லது நோக்கம் அல்லது அடைவு, அல்லது
எதிர்பார்க்கும் விடயம் என்று பொருள் கொள்ளப்படும்||
அதாவது ஷரீஆ தனது போதனைகள் மூலம் அடைய
விரும்புகின்ற இலக்குகளைக் குறிக்கின்றது. இக்கருத்தில் வேறு பல பிரயோகங்களையும்
இமாம்கள் பயன்படுத்திவந்துள்ளனர். மஸாலிஹ்- நலன்கள்;
அஸ்ரார்- இரகசியங்கள்; இலல்
- காரணிகள்; நதாஇஜ் - விளைவுகள், மஆல்
- அடைவுகள் போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
• ~~மகாஸிதுஷ் ஷரீஆ||
பற்றிய சிந்தனை வளர்ந்து வந்த வரலாற்றுப்
பின்னணியை நோக்கினால் குர்ஆனும், ஸ{ன்னாவும் சிலபோது சட்டங்களை முன்வைக்கும்
சந்தர்ப்பங்களில் அந்த சட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணத்தையும்
தொடர்புபடுத்தி நேரடியாகவோ. சூசகமாகவோ பேசியிருப்பதைக் காணலாம். இது, குறித்த
சட்டம் தோற்றுவிக்கப்பட்டதன் இரகசியத்தை, நோக்கத்தை அல்லது காரணத்தை முன்வைப்பதாக
உள்ளது. முஜ்தஹித்கள் இதனை விளக்க முற்பட்ட பின்னணியிலேயே இக்கலை தோன்றியதெனலாம்.
எனவே ஷரீஆவின் நோக்கம் வெறும் பகுத்தறிவு சரிகாணும் நலனன்று மாறாக படைப்பாளன்
சரிகாணும் நலனாகும்.
• அல்குர்ஆனும் ஸ{ன்னாவும் முன்வைக்கும் போதனைகளுக்குப்
பின்னாலுள்ள நோக்கங்களை சில இடங்களில் தெளிவாக வரையறுத்துக் கூறியும்
இன்னும் சில இடங்களில் மனித இஜ்திஹாத் ஆய்வுக்கு விட்டும் வைத்துள்ளன.
~~ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு)
என்னை வணங்குவதற்காகவேயன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை|| - (51:56)
• ஜும்ஆவுடைய நேரத்தில் வர்த்தகம் செய்வது
தடுக்கப்பட்டதன் நோக்கம்: அது ஜும்ஆ தொழுகைக்கு தடையாக அமைகிறது என்பதனாலாகும். ~~விசுவாசிகளே! (வெள்ளிக்கிழமையாகிய) ஜும்ஆத் தினத்தன்று தொழுகைக்காக (பாங்கு சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால் வர்த்தகத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை
தியானிக்க நீங்கள் விரைந்து செல்லுங்கள் (63:9)
• காபிர்கள் அறியாத்தனமாக அல்லாஹ்வுக்கு ஏசுவதைக்
தவிர்க்க வழி செய்ய வேண்டும் என்ற நோக்கில் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவோரது
கடவுளை ஏச வேண்டாம் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
• (விசுவாசிகளே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள்
(ஆண்டவர்களென) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள்
அறியாமையின் காரணமாக, வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் (6:108)
• இவ்வாறே ஸ{ன்னாவிலும் நபி (ஸல்) அவர்கள் தனது போதனைகள்
சட்டங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களை சில இடங்களில் தெளிவாகக் கூறியும்
வேறுசில இடங்களில் ஸஹாபாக்கள் வினாத்தொடுத்ததன் பின்னர் நோக்கத்தை தெளிவுபடுத்தி
இருப்பதையும் காணலாம். உதாரணம் : பனூ குரைழா கோத்திரத்தை நோக்கி அனுப்பப்பட்ட
ஸஹாபாக்களிடம் அங்கு சென்ற பின்னரே அஸர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று
பணித்து அனுப்பியதன் நோக்கம் விரைவாகச் செல்ல வேண்டும் என்பதாகும்.
• ஷரீஅத்
சட்டங்கள் மனித சக்திக்கு உட்பட்டவைகளே.
மனிதனால் சுமக்க முடியாதவைகளை அல்லாஹ்வும் ரஸ{லும் சுமத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தும்
நோக்கில் பின்வரும் நிகழ்வு அமைந்துள்ளது. ஒருவர் நோன்புடன் வெயிலில் நிற்க
நேர்ச்சை வைத்தார். அது கேள்விப்பட்ட நபிகளார் தடுத்துவிட்டு ~~எல்லை
மீறி நடப்போர் நாசமாகட்டும்|| என்றார்.
• தொடர்ந்து நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கி
மனைவியை ஒதுங்கி வாழ்வேன் என்று கூறிய ஸஹாபியைப் பார்த்து ~~நான்
நோன்பு நோற்கிறேன், நோற்காமலும் இருக்கிறேன். இரவில் எழுந்து
நின்று வணங்குகிறேன், சிலபோது தூங்கவும் செய்கிறேன்.... என்று விளக்கமளித்ததன்
மூலம் ஷரீஅத் மனிதர்களை சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் வீழ்த்த விரும்பவில்லை.
இலகுவையே அது நோக்காகக் கொண்டிருந்தது என்பது உறுதியாகின்றது.
• தொழுகையை முன்னின்று நடாத்தும் இமாம் நீட்டித்
தொழுவிக்காமலிருக்கக் காரணம், உங்களில் ஒருவர் மக்களுக்கு இமாமாக நின்று
தொழுகை நடத்தினால் அதனை நீட்டாது சுருக்கிக் கொள்ளட்டும். ஏனெனில் அவர்களில்
பலவீனர், நோயாளி, அவசரத்
தேவையுடையோர் இருக்கலாம். உங்களில் ஒருவர் தனித்துத் தொழுதால் அவர் நாடியளவு
நீட்டித் தொழுதுகொள்ளட்டும்.
• இஸ்லாம் தண்டனை வழங்குவதன் ஊடாக எதிர்பார்க்கும்
நோக்கங்களில் ஒன்றான நீதியை நிலைநாட்டுதல் என்ற அம்சம் நிறைவேறமாட்டாது என்ற
சூழ்நிலையில் கலீபா உமர் (ரழி) அவர்கள் மதீனாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது
திருடர்களது கரங்களை வெட்டும் சட்டத்தை இடைநிறுத்தி வைத்திருந்தார்கள்.
• எனவே மகாஸிதுஷ் ஷரீஆ என்பது ஒரு வகையில்
சட்டங்களுக்குப் பின்னால் உள்ள நியாயம் என்ன என்பதை விளக்குகின்றது. மற்றொரு
வகையில் மகாஸிதுஷ் ஷரீஆ என்பது, ஷரீஆ சில விடயங்களை தடைசெய்வதன் ஊடாகவும்
மற்றும் சில விடயங்களை அனுமதிப்பதன் ஊடாகவும் ஏற்படுத்த விரும்புகின்ற சில
நன்நோக்கங்களைக் குறித்து நிற்கும். இன்னொரு வகையில் மகாஸிதுஷ் ஷரீஆ என்பது
இஸ்லாமிய ஷரீஆ எழுந்து நிற்கின்ற பண்பாட்டு விழுமியங்களையும், தெய்வீக
இலக்குகளையும் குறித்து நிற்கின்றது.
• ~~மகாஸித்|| என்ற துறையை பல்வேறு அறிஞர்கள் பல
கண்ணோட்டங்களில் விளக்கியுள்ளனர். ஹிஜ்ரி 3ஆம் நூற்றாண்டில் முஹம்மத் இப்னு அலி
அத்திர்மிதி அல் ஹகீம் என்பவர் ~~அஸ்ஸலாத் வ மகாஸிதுஹா|| என்ற
நூலையும் பின்னர் ~~இலலுஷ் ஷரீஆ||,
~~இலலுல்
உபூதிய்யா||, ~~அல் புருல்|| போன்ற நூல்களையும் முன்வைத்தார். ஹி 4 ஆம்
நூற்றாண்டில் இமாம் அபூ மன்ஸ{ர் அல் மாதுரூதி மஃஹதுஷ் ஷராஈ என்ற ஆக்கத்தை
முன்வைத்தார். ஹிஜ்ரி 5 ஆம் நூற்றாண்டில் இமாம் இப்னு அப்துல்லாஹ் அல்
ஜுவைனி (ரஹ்) ~~அல் புர்ஹான்||
என்ற நூலில் மகாஸித், மக்ஸ{த், கஸ்த்
என்ற சொற்பிரயோகங்களை மிக அதிகமாகவே கையாண்டுள்ளார்,
இவரே ழரூரிய்யாத், ஹாஜிய்யாத், தஹ்ஸீனிய்யாத்
என்ற மகாஸிதுஷ் ஷரீஆவின் முப்பிரிவுகளையும் அறிமுகப்படுத்திய முன்னோடியாவார், தொடர்ந்து
வந்த இமாம் அபூ ஹாமித் அல்; கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும், இமாம்
ஜுவைனியின் கருத்தைப் பின்பற்றி ~~மஸாலிஹ் முர்ஸலா||
எனப்படும் வரையறுக்கப்படாத நலன்களின் ஒரு
வகையாக மகாஸிதை கருதினார். தொடர்ந்துவந்த பல நூற்றாண்டுகளிலும் பக்ருத்தீன்
அர்ராஸி, ஸைபுத்தீன் அல் ஆமிதி, இமாம் அல் பைழாவி, இமாம் இப்னு தைமியா, இமாம் இஸ் இப்னு அப்துஸ்ஸலாம் போன்ற பல்வேறு
அறிஞர்களும் நவீன காலத்தில் இமாம் ரஷீத் ரிழா, தாஹிர் இப்னு ஆஷ{ர், செய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, கலாநிதி
யூஸ{ப்
அல் கர்ளாவி, கலாநிதி தாஹா ஜாபிர் அலவானி போன்றோர்களும்
மகாஸிதுஷ் ஷரீஆ துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பங்களிப்பு
நல்கியுள்ளார்கள்.
• ஒவ்வொரு காலகட்டத்திலும் மகாஸிதுஷ் ஷரீஆ
குறித்து அறிஞர்கள் முன்வைத்த வரைவிலக்கணங்களை நோக்குவோம். ஆரம்பகால அறிஞர்களைப்
பொறுத்தமட்டில் அவர்களிடம் மிக நுணுக்கமான வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணங்கள்
காணப்படாவிட்டாலும் அதன் செயல்வடிவம் காணப்பட்டுவந்துள்ளது. அதனை காரணம், நியாயம், நோக்கம், பயன், இரகசியம், எதிர்பார்ப்பு, அடைவு
போன்ற சொற்களால் முன்வைத்ததோடு மகாஸிதுஷ் ஷரீஆவின் மூன்று முக்கிய பிரிவுகள், அடிப்படையான
5 அம்சங்கள்
குறித்துப் பேசியுள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மகாஸிதுஷ் ஷரீஆவின்
தேவை வீச்சு மிகவும் விசாலித்தமையால் அது ஒரு ஷரீஅத் துறைசார் அறிவின் கலையாக
பரிணாமம் பெற்றது. அது குறித்து பல வரைவிலக்கணங்கள் தோன்றியது போலவே நூல்களும்
உருவாயின.
1. அல் பாஸி அவர்கள் ~~மகாஸிதுஷ்
ஷரீஆ என்பதன் கருத்து சட்டம் இயற்றியவன் ஒவ்வொரு சட்டத்திற்கு பின்னாலும் வைத்துள்ள
இரகசியங்கள் அல்லது நோக்கங்களையே குறிக்கின்றன|| என்று விளக்குகிறார்.
2. கலாநிதி அஹ்மத் அர் ரய்ஸ{னி
: மகாஸிதுஷ் ஷரீஆ என்பது ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது மக்களுக்கு
ஏற்படும் நலன்களை இலக்காகக் கொள்வதனையே குறிக்கின்றது.
3. கலாநிதி முஹம்மத் இப்னு ஸஃத் ~~பொதுவாகவும்
குறிப்பாகவும் மனித நலன்களை நிலைநாட்டுவதற்காக சட்டங்களை உருவாக்கியவன் அதனை
உருவாக்கும் போது கவனத்திற் கொண்ட காரணங்களையும் நோக்கங்களையுமே குறிக்கின்றது||
4. கலாநிதி முஸ்தபா இப்னு கராமா: மகாஸிதுஷ் ஷரீஆ
என்பது சட்டத்தை உருவாக்கியவன் அதனூடாக நாடிய நலன்களையே குறிக்கின்றது.
5. நூருத்தீன் அல் காதிமி : ஷரீஆ சட்டங்களுக்குப்
பின்னால் உள்ள காரணங்களையும் அதன் விளைவுகளையுமே குறிக்கின்றது; அது
ஒரு குறித்த பகுதியிலும் சரி முழுமையிலும் சரி மனிதனது ஈருலக வாழ்வினதும் நலன்களை
குறிக்கோளாகக் கொண்டு, ஒரே இலட்சியத்தின்பால் அமைந்துள்ளது.
6. இமாம் கராபி (றஹ்) ஷரீஅத்தில் ஒரு விடயம்
மகாஸிதுகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டுமெனில் அது தெளிவான ஒரு இலக்கை அடையக்
கூடியதாகவும் ஒரு நலனை ஏற்படுத்தக் கூடியதாகவும் அல்லது ஒரு தீங்கை தடுக்கக்
கூடியதாகவும் காணப்படல் வேண்டும்.
மகாஸிதினுடைய பரிமாணங்கள் :
• மகாஸிதுஷ் ஷரீஆவின் வகைப்படுத்தல்கள் பல்வேறு
வடிவங்களில் அமைந்துள்ளன. பாரம்பரிய வகைப்படுத்தல்கள் மூன்று படிநிலைகளைக்
கொண்டது. அவை
1. ழரூரிய்யாத்
- அத்தியாவசிய
நிலை (அத்தியசிய தேவைகள்)
2. ஹாஜிய்யாத்
- தேவை
நிலை (சாதாரணத் தேவைகள்)
3. தஹ்ஸீனிய்யா - ஆடம்பர நிலை
(மேலதிக
தேவைகள்)
அத்தியவசிய நிலை : ழரூரிய்யாத்
இதனை அத்தியவசியத் தேவையென்றும் குறிப்பிடலாம்.
மனித குலத்தின் வாழ்வு எதில் தங்கியுள்ளதோ அவ்வாறான நலன்களே ழரூரிய்யாத் என
அழைக்கப்படுகின்றது. இந்த வகையான நலன்கள் புறக்கணிக்கப்பட்டால் மனித வாழ்வு
சீர்குலைந்துவிடும், குழப்பங்கள் நிறைந்ததாகமாறும், பெரும்
அழிவுக்கும் சீர்கேட்டுக்கும் இட்டுச் செல்லும்.
அத்தியாவசிய நிலைத் தேவைகளை இமாம்கள் ஆறு
பகுதிகளாக பிரித்து நோக்கினர். அவை தீன், உயிர், புத்;தி, பரம்பரை, மானம், செல்வம் என்பனவாகும்.
1. தீனைப் பாதுகாத்தல்
தீனை வளர்த்தல்,
பாதுகாத்தல் என்பதுவே இதன் நோக்கமாகும்.
நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல், தீனின் விடயத்தில் அத்துமீறுவோரைத் தடுத்து
நிறுத்தல், தீனுக்கு முட்டுக் கட்டையான அம்சங்களை தடுத்து
நிறுத்துவதற்கான வழியாக ஜிஹாதை கடைப்பிடித்தல், மதம் மாறுவோருக்குத் தண்டனை வழங்கல், அகீதாவிற்கு
எதிரான சந்தேகங்களை கிளப்புவோருக்கெதிராக நடவடிக்கையெடுத்தல் போன்ற நடவடிக்கைகள்
ஊடாக தீன் பாதுகாக்கப்படுகின்றது.
2. உயிரைப் பாதுகாத்தல்
உயிரைப் பாதுகாப்பதற்கும், போஷிப்பதற்குமாக
உணவு, பானம், ஆடை
என்பனவற்றின் மூலம் உத்தரவாதப் படுத்தப்படுகின்றது. மேலும் உயிர் பாதுகாப்பு
நடவடிக்கையின் ஓர் அம்சமாகவே தற்கொலை தடைசெய்யப்படுகிறது. மேலும் பழிக்குப்பழி, மற்றும்
தியத் என்பன விதிக்கப்பட்டிருப்பதும் உயிரைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.
மனித உயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே
நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அல்லது சுற்றாடல் சுத்தம் பேணும்
நடவடிக்கைகள் போன்றவற்றை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இன்றேல் மனித வாழ்வு
சீரழிந்து விடும், சிக்கல்கள் நிறைந்ததாகவே மாறும்.
3. புத்தியைப் பாதுகாத்தல்
புத்தியைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே
மதுபானம் அருந்துதல், ஏனைய போதைப் பொருட்களைப் பாவித்தல் என்பன
தடுக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான தண்டனைகளையும் இஸ்லாம் விதித்துள்ளது.
மனிதனது அறிவு,
புத்தி பாதிக்கப்படும் போது மனித வாழ்வே
பாதிக்கப்படுகின்றது. இதனாலேயே அனைத்து போதைப் பொருட்களும் தடுக்கப்பட்டுள்ளன.
4. பரம்பரையைப் பாதுகாத்தல்
பரம்பரையைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே
திருமணம் ஊக்கப்படுத்தப்பட்டு விபசாரம் தடுக்கப்பட்டு, அதற்கு
தண்டனையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை வளர்ப்பு, குடும்ப
பராமரிப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் விதமாக இஸ்லாம் அதிக சட்டங்களை
முன்வைத்திருப்பதன் இரகசியமும் இதுதான்.
5. மானத்தைப் பாதுகாத்தல்
தனது மானத்தையும் பிறரது மானத்தையும்
பாதுகாப்பது ஒவ்வொருவரதும் கடமையாகும். அதனைக் களங்கப்படுத்துவது பாவமாகும்.
இதனாலேயே படுதூறு, லிஆன் போன்றவற்றை இஸ்லாம் தடுத்துள்ளதோடு
அவற்றைப் பாவமாகக் கருதி தண்டனைகளையும் நிர்ணயித்துள்ளது.
6. செல்வத்தைப் பாதுகாத்தல்
இஸ்லாம் ஹலாலான வழியில் உழைப்பதை
வலியுறுத்தியுள்ளது. பிறரது சொத்துக்களை அபகரித்தல்,
திருடுதல், பதுக்கல், வட்டி, ஊழல், ஏமாற்று போன்ற பொருளாதார நடவடிக்கைகளைப்
பாதிக்கும் அனைத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது. மேலும் புத்தி குறைந்தோர், பைத்தியகாரர்கள்
கொடுக்கல் வாங்கள்களில் ஈடுபடுவதை சமூக நலன் கருதி தடுத்துள்ளது.
இந்த ஆறு அம்சங்களும் பாதுகாக்கப்படல், வளர்க்கப்படல்
என்பன ஊக்கப்படுத்தப்படும் விதமாகவும் இவை பாதிக்கப்படும் அம்சங்கள்
தடுக்கக்கூடியதாகவுமே சட்டங்கள் உருவாகியுள்ளன.
2. தேவை நிலை : ஹாஜிய்யாத்
அடுத்து வருவது தேவை நிலையாகும். மனிதர்களுக்கு ஏற்படும்
கஷ்டங்கள், அசௌகரியங்களை நீக்குவதை வேண்டி நிற்பதே
ஹாஜிய்யாத் நிலையாகும். இப்பிரிவைச் சார்ந்த நலன்கள் ழரூரிய்யத்தை விட
படித்தரத்தில் குறைந்தவை. இவை இல்லாவிடின் வாழ்க்கை ஒழுங்கு சீர்குலையாது, சமூகத்தின்
இழப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது, எனினும் வாழ்வின் நெருக்கடிகளையும், கஷ்டங்களையும்
எதிர்கொள்ள நேரிடும். இந்த நலன்கள் மனிதர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை
நீக்குவதாகவே அமையும்.
மனிதனுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், நெருக்கடிகளையும்
நீக்கி, சௌகரியத்தையும், வசதிவாய்ப்பையும்
ஏற்படுத்தும் விதமாக இஸ்லாம் சட்டங்களில் சலுகைகள் தந்திருப்பதை நோக்கலாம்.
உதாரணமாக நோயாளி, பிரயாணி ஆகியோர் ரமழான் நோன்பு நோற்பதிலிருந்து
விதிவிலக்குப் பெற்று பிறிதொரு காலத்தில் நிறைவேற்றிக் கொள்ள சலுகை
வழங்கப்பட்டுள்ளமை, பிரயாணி நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாக
நிறைவேற்றல், நீரில்லாத போது தயம்மம் செய்தல் போன்றவற்றைக்
குறிப்பிடலாம்.
~~அல்லாஹ் உங்கள் மீது எந்தவொரு அசௌகரியத்தையும்
ஏற்படுத்த விரும்பவில்லை|| (5:6)
~~அல்லாஹ் உங்களுக்கு இலகுபவை நாடுகின்றான், மேலும்
அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை (2:185)
~~நபியவர்களுக்கு முன் இரண்டு விடயங்கள்
முன்வைக்கப்பட்டால், பாவம் இல்லாவிடில் அவற்றில் மிக இலகுவானதையே
அவர் தேர்ந்தெடுப்பார்கள்||
ஆடம்பர நிலை : தஹ்ஸீனிய்யாத் அல்லது
தக்மீலிய்யாத்
உயர்ந்த ஒழுக்க விழுமியங்களுக்கும் சீரிய
பண்பாடுகளுக்கும் இணங்க மனித வாழ்வு அமைவதற்குத் தேவையான நலன்களே தஹ்ஸீனிய்யாத் -
தக்மீலிய்யாத் எனப்படும்.
இந்த வகையான நலன்கள், ழரூரிய்யாத், ஹாஜிய்யாத்
வகையான நலன்களை விடவும் தரத்தில் குறைந்தவை, இவை இல்லாவிடில் வாழ்வொழுங்கு சீர்குலையவோ
சிக்கலானதாக அமையவோ அசௌகரியமும் நெருக்கடி நிலையும் ஏற்படவோ மாட்டாது. ஆயினும்
அழகிய பண்பாடுகள், நல்லொழுக்கம்,
சீரான மனித இயல்புகள் என்பவற்றிக்கு முரணாக
வாழ்வு அமைந்துவிடும்.
வெள்ளிக்கிழமை தினங்களில் வெள்ளாடை அணிதல், பெருநாட்களில்
புத்தாடையணிதல், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தல், உண்ணல், குடித்தல்
ஒழுங்குகள் போன்றவற்றை தஹ்ஸீனிய்யாத்துக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
இஸ்லாமிய சட்டத் துறையில் பல்வேறு அடிப்படை
விதிகளைப் பயன்படுத்தியே சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அவ்விதிகள் ~~அல்
கவாஇத் அல் பிக்ஹிய்யா|| என வழங்கப்படுகின்றன. நூற்றுக்கணக்கான
கவாஇத்கள்- விதிகள் காணப்பட்டாலும் அவை அனைத்திற்கும் மிக பிரதான அடிப்படைகளாக 5 விதிகள்
அமைந்து காணப்படுகின்றன. அவ் ஐந்து விதிகளும் அனைத்து அறிஞர்கள் மத்தியிலும்
ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவ்விதிகள் பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
1. அல் உமூரு பிமகாஸிதிஹா
நோக்கங்களைப் பொறுத்தே செயற்பாடுகள்
தீர்மானிக்கப்படுகின்றன.
ஆதாரம் ~~செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே||
உதாரணம் : ஒருவர் மற்றொருவரை மனமுறண்டாக எந்த
நியாயமுமின்றி கொலை செய்தால் அதற்குரிய தீர்வும்,
ஒருவர் மற்றொருவரை தவறுதலாக கொலை செய்தால்
அதற்குரிய தீர்வும் வேறுபட்டே அமைகின்றது. இத்தீர்வுகள் மாறுபட்டு அமைவதற்கான
அடிப்படை இருவரதும் வேறுபட்ட நிய்யத் ஆகும்.
02.அல் யகீனு லா யஸ_லு பிஷ் ஷக்
உறுதியான நிலைப்பாட்டை இடையில் ஏற்படும்
சந்தேகம் மாற்றாது
ஆதாரம் : ஒருவருக்கு காற்றுப் பறித்தால் அதன்
சத்தம் அல்லது வாசத்தை உணரும் வரை திரும்ப வுழு செய்ய வேண்டியதில்லை.
உதாரணம் : ஒருவர் வுழு செய்தார் என்பது
அவருக்கு உறுதியாக ஞாபகத்தில் இருக்கின்றது. இடையில் வுழு முறிந்ததா இல்லையா என
சந்தேகம் தோன்றுகிறது. இப்போது வுழுவுடன் இருப்பதாகவே தீர்ப்பாகின்றது. இதற்குக்
காரணம் வுழுவுடன் இருப்பது என்பது உறுதியான விடயமாகும்.
03. அல் மஷக்கது தஜ்லிபுத் தய்ஸீர்
சிரமம் சட்டங்களைத் தளர்த்தும்
ஆதாரம் : மார்க்கத்தில் அல்லாஹ் எந்தவொரு
கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை ( ஹஜ் : 78)
உதாரணம் : பிரயாணிகளுக்கு சேர்த்து
தொழுவதற்கும் நான்கு ரக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கும் சலுகை
வழங்கப்பட்டிருப்பது இதன் அடிப்படையிலாகும்.
04. அல்லரரு யுஸாலு - தீமை நீக்கப்பட வேண்டும்
ஆதாரம் : ~~தீங்கு செய்யவும் கூடாது தீங்கிற்கு உட்படவும்
கூடாது||
உதாரணம் : ஒருவரது வீட்டு ஜன்னல் அயல்
வீட்டாருக்கு இடைஞ்சலாக அமையுமெனில் அதனை அகற்றிக் கொள்ள வேண்டும்.
04. அல்லரரு யுஸாலு - தீமை நீக்கப்பட வேண்டும்
ஆதாரம் : ~~தீங்கு செய்யவும் கூடாது தீங்கிற்கு உட்படவும்
கூடாது||
உதாரணம் : ஒருவரது வீட்டு ஜன்னல் அயல்
வீட்டாருக்கு இடைஞ்சலாக அமையுமெனில் அதனை அகற்றிக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment